Welcome To trichytoday.com

Hot News :
விக்கெட் இழப்பின்றி மும்பை அபார வெற்றி|மானாமதுரை அருகே பெண்ணுடன் தொடர்பு: இலங்கை அகதி வெட்டிக் கொலை|டெக்கான் அணி வெற்றி: சென்னைக்கு கிடைத்தது பிளே ஆஃப் வாய்ப்பு|கத்தாரில் ராஜபட்சவுக்கு வரவேற்பு|மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு ராஜிவ் காந்தி பெயரை வைக்கக் கோரிக்கை|லண்டனில் முள்ளிவாய்க்கால் நினைவுதின நிகழ்ச்சி|மோசமான ஆட்சியின் ஓராண்டு தினத்தை கொண்டாடுகிறார் மமதா: மார்க்சிஸ்ட்|
Hot News :
Jayalalithaa steps up campaign for Sangma|Kovilpatti man held for threat to K-plant|Jaya writes to Manmohan on another river issue|Need for mature ties with China|Seven buildings razed in drive on encroachments|Vellore'sChenganatham Hills, a walkers’ paradise|
website design Offer - www.trichytoday.com
Advertise Here 185px X 85px
Advertise Here 185px X 85px
Advertise Here 185px X 85px
Advertise Here 185px X 85px
Advertise Here
185px X 85px
  • Healthy eating need not be a drag
    Think healthy food and common perception limits it to salads, soups, egg whites, boiled and bland food.
    Somehow eating healthy ..
  • The quickfix wonder
    When you first hear about it, it sounds like an action flick or some obscure martial arts form. But a little research will tell yo..
  • Keep your heart in the pink of health
    As per the World Health Organization estimates, 60 per cent of the cardiac patients in the world today are Indians.
    By 2025, th..
  • Making yoga work for you
    The best part about yoga is that it understands the complex relationship between the body and mind. The reason why various fitness..
  • 6 pack abs for the lazy ones
    Vibration Amplification of Sound Energy at Resonance, used for body contouring, now helps in getting illusionary abs.
  • Fenugreek: Best way to ward off cold
    The spice's anti-viral properties cures cold and flu symptoms and prevents the conditions starting in the first place.
  • யு.பி.எஸ்.சி., தேர்வில் பாதிபேர் "ஆப்சென்ட்'
    மதுரைஃமதுரையில் நேற்று நடந்த யு.பி.எஸ்.சி., தேர்வில் 8 ஆயிரம் பேரில், பாதி பே ர்தான் பங்கேற்றனர்.ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., பணிகளுக்கான மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முதன்மைத் தேர்வு, நேற்று மதுரையில் 23 மையங்களில் நடந்தது. இதில் 8 ஆயிரத்து 100 பேர் பங்கேற்றனர். காலை, மாலை இருவேளைகளிலும் நடந்த இத்தேர்வு ஓ.சி.பி.எம்., சேதுபதி பள்ளிகள், அரசு மீனாட்சி பெண்கள் கல்லூரி, தமிழ்நாடு பாலிடெக்னிக் உட்பட பல மையங்களிலும் நடந்தது. இதில் 4663 பேர் பங்கேற்கவில்லை. மதுரை கலெக்டர் சகாயம், டி.ஆர்.ஓ., ரவீந்திரன் மற்றும் 8க்கும் மேற்பட்ட துணைகலெக்டர்கள் தேர்வு மையங்களை பார்வையிட்டனர்.


  • படகுத்துறையில் பராமரிப்பு இல்லாத படகுகள் : சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
    திற்பரப்பு : திற்பரப்பு படகுத்துறையில் பராமரிப்பில்லாத படகுகளால் சுற்றுலா பயணிகள் படகுசவாரி மேற்கொள்ள முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.குமரி மாவட்டத்தில் இயற்கை அழகை ரசிக்க பல பகுதிகள் உள்ளன. ஆனால் மாவட்டத்தில் கன்னியாகுமரியை அடுத்து அதிகளவு சுற்றுலா பயணிகள் திற்பரப்பிற்கு வருகின்றனர். சீசன் துவங்கிய பின் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.பெரும்பாலான நாட்களில் வாகனங்கள் நிறுத்த இடமில்லாமல் களியல் வரை சுற்றுலா வாகனங்கள் ரோட்டோரத்தில் நிறுத்தப்படுகின்றன. இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தும் வகையில் திற்பரப்பு அருவியின் மேற்பகுதியில் செக்டேம் அருகில் கடையல் பஞ்., சார்பில் படகுத்துறை அமைக்கப்பட்டது. அமைதியாக காணப்படும் கோதையாற்றில் படகு சவாரி மேற்கொள்வது சுற்றுலா பயணிகளுக்கு மிகுந்த ஆனந்தத்தை கொடுக்கிறது. இதனால் படகு சவாரிக்கு சுற்றுலா பயணிகளின் வரவேற்பு அதிகரித்தது. இதனை தொடர்ந்து 4 பெடல் படகுகளுடன் துவங்கிய படகு சவாரி படிப்படியாக 8 பெடல் படகுகளும், இரண்டு பெரிய படகுகளுமாக மாறியது.தற்போது படகுகள் பராமரிப்பற்ற நிலையில் காணப்படுகிறது. மூன்று பெடல் படகுகள் பழுதடைந்து ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற ஐந்து படகுகளும் பரிதாபமான நிலையில் உள்ளது. தண்ணீர் உள்ளே புகும் நிலையிலும், பெடல்கள் ஒடிந்தும் காணப்படும் படகுகளில் ஒரு சில படகுகள் தச்ற்போது சுற்றுலா பயணிகளுக்கு சவாரிக்காக கொடுக்கின்றனர்.படகுசவாரி நடத்தும் நிர்வாகம் படகுகளை சீசனுக்கு முன் பராமரிக்கவோ, புது படகுககளை இயக்கவோ நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது சீசன் என்பதால் திற்பரப்பு பகுதியில் இருந்து வினியோகிக்கப்படும் படகுசவாரிக்கான டிக்கெட்டை பணம் கொடுத்து வாங்கிவிட்டு படகுத்துறைக்கு செல்கின்றனர் பல சுற்றுலா பயணிகள்.அங்கு சென்று பார்க்கும் போது மிக குறைவான எண்ணிக்கையுடன் படகுகள் உள்ளதால் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. பலர் காலதாமதம் மற்றும் படகுகளின் பரிதாப நிலையை கண்டு டிக்கெட் பணத்தை திரும்ப பெற்றும், பெறாமலும் திரும்பி செல்கின்றனர்.சீசன் துவங்கும் நாட்கள் முன் கூட்டியே தெரிந்தும் இருக்கும் படகுகளை பராமரித்து இயக்கவோ, கூடுதலாக படகுகளை வாங்கவோ தயாராகாத நிர்வாகம் சுற்றுலா பயணிகள் ஏமாறும் வகையில் செயல்பாடு உள்ளது என பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். இதுபோல் இப்பகுதியில் குடிநீர் வசதி ஏற்படுத்தாமல் கட்டணங்கள் மட்டும் போட்டிபோட்டு வசூலிப்பது சுற்றுலா பயணிகளை கூடுதல் அதிருப்திக்கு உள்ளாக்கிறது.இது குறித்து கடையல் பஞ்., தலைவர் சேகர் கூறியதாவது:கடந்த சில ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாததே பரிதாப நிலைக்கு படகுகள் மாறக்காரணமாக உள்ளது. உடனடியாக பழுதடைந்து உள்ள மூன்று படகுகளையும் சரிசெய்து இயக்கப்படும். சுற்றுலா பயணிகள் வசதிக்காக பெரிய படகுகள் புதிதாக இயக்க முயற்சிகள் எடுத்து வருகிறோம். இவ்வாறு பஞ்., தலைவர் சேகர் கூறினார். அதிகரிக்கும் சுற்றுலா பயணிகள் : அலட்சியத்தில் அரசு அதிகாரிகள்மாவட்டத்தில் முக்கியமானதும், அதிக சுற்றுலா பயணிகள் வருவதுமான திற்பரப்பு அருவி மற்றும் அதை சுற்றியுள்ள சுற்றுலா தலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள், சுத்தமான குடிநீர், வாகனங்கள் நிறுத்த போதுமான இடவசதி போன்றவைகள் செய்து கொடுக்கப்படாமலும், கட்டணம் பெற்று குளிக்க அனுமதிக்கும் ஆபத்தான நீச்சல் குளம், பராமரிப்பற்ற, பாதுகாப்பற்ற படகு சவாரி என்ற குறைகளும் நிவர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட நிர்வாகங்கள் முன்வரவில்லை.இதை சுற்றுலாத்துறையோ, மாவட்ட நிர்வாகமோ கண்டுகொள்ளாதது பொதுமக்களுக்கு வியப்பாக உள்ளது. அதிகரித்து வரும் சுற்றுலா பயணிகளின் வருகையை தக்கவைக்க போதிய நடவடிக்கைகள் மேற்கொள்வது மிகவும் அவசியம்.


  • மதுரை ஆரப்பாளையம் வைகை மேம்பாலப்பணி செப்., 30ல் திறக்க நெடுஞ்சாலைத்துறை முடிவு
    மதுரை:மதுரை ஆரப்பாளையம் வைகை மேம்பாலம் கட்டுமானப்பணி துரிதமாக நடக்கிறது. செப்., 30ல் போக்குவரத்துக்கு திறந்துவிட அதிகாரிகள்முடிவு செய்துள்ளனர்.ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டும்போது, அதனருகே மற்றொரு மேம்பாலம் கட்ட தேவையான இடம் ஒதுக்கப்படுவதுவழக்கம். இதன்படி, மதுரை ஆரப்பாளையம் வைகை (காமராஜர் பாலம்) மேம்பாலம் 1978ல் கட்டப்பட்டது. இதனருகே மற்றொரு மேம்பாலம் கட்டஅப்போது இடம் கையகப்படுத்தப்பட்டது. மதுரையில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க காமராஜர் மேம்பாலம் அருகே மற்றொரு மேம்பாலம் கட்டநெடுஞ்சாலைத்துறை அரசிடம் அனுமதி கோரியது.புதிய மேம்பாலம்: இதன்படி, ரூ.12 கோடி மதிப்பில் பாதசாரிகள் நடைபாதை (2 மீட்டர்) உட்பட 10 மீட்டர் அகலம், 250 மீட்டர் நீளத்தில், ஆற்றின்குறுக்கே 13 தூண்களுடன் மேம்பாலம் கட்டும் பணி நெடுஞ்சாலைத்துறை மூலம் துரிதமாக நடக்கிறது. பாலத்திற்கான அணுகுசாலை 3 மீட்டர்அகலத்தில் சாலையின் இருபுறமும் விரிவாக்கும் பணி நடக்கிறது. இப்புதிய மேம்பாலத்தின் கட்டுமானப்பணியை செப்.,30க்குள் முடிக்க இலக்குநிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய மேம்பாலத்தால் மதுரை - திண்டுக்கல் ரோட்டில் போக்குவரத்து நெரிசல் குறையும்.வ.உ.சி., மேம்பாலம்: பைபாஸ்ரோட்டில் பழங்காநத்தம் ரவுண்டானாவுக்கு அருகே உள்ள வ.உ.சி., ரயில்வே மேம்பாலம் அருகே மற்றொரு மேம்பாலம் கட்டுவதற்கான ஆய்வுகள்விரைவில் துவங்க உள்ளது. மதுரை - போடி இடையே அகல ரயில் பாதை திட்டத்துக்காக பழைய மீட்டர் கேஜ் தண்டவாளங்கள் அகற்றப்பட்டுள்ளன.அகல ரயில் பாதைப்பணிகளை ரயில்வே நிர்வாகம் விரைவில் துவங்கவுள்ளது. இப்பணி முடிவதற்குள் மேம்பாலம் கட்ட ஏற்பாடுகள் நடக்கிறது.


  • மின் வெட்டு நேரத்தை குறைக்க முடிவு
    ஊட்டி:நீலகிரியில் மின் வெட்டு நேரத்தை பாதியாக குறைக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது.மாநிலத்தில் நிலவும் மின் பற்றாக்குறை காரணமாக, நீலகிரி மாவட்ட மின் பகிர்மான வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி முதல், நாள்தோறும் 4 மணி நேரம் மின் தடை அமல் படுத்தப்பட்டது. இதன் பேரில் சாண்டினள்ளா, ஊட்டி, அத்திப்பள்ளி, சேரம்பாடி, ஜெகதளா, அதிகரட்டி, குந்தா, கட்டபெட்டு, கோத்தகிரி ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 8.00 மணி முதல் 10.00 மணி வரையும்; மதியம் 2.00 மணி முதல் 4.00 மணி வரையும் மின் வினியோகம் தடை செய்யப்பட்டது.நேரம் மாற்றம்:நீலகிரி, கோவை மாவட்டங்களில் தொடர்ந்த கோடை மழையால், சமவெளிப்பகுதிகளில் வறண்ட வானிலை மாறி காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதன் காரணமாக காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால் மின் தடை தளர்த்தப்பட்டு வருகிறது. மின் தடை நேரமும் மாற்றப்பட்டுள்ளது. இதன்படி, 4 மணி நேர மின்வெட்டை 2 மணி நேரமாக குறைக்க மின் வாரியம் முடிவு செய்துள்ளது. இந்த முறை அமல் படுத்தப்பட்டால் உள்ளூர் மக்கள் நிம்மதி அடைவர்.மின் தடை ரத்து வரும்:தற்போது கோடை காலம் முடிவடைந்து, தென்மேற்கு பருவ மழை திர்பார்க்கப்படுகிறது."இந்தாண்டு பருவ மழை உரிய நேரத்தில் பெய்யும்,' என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவத்துள்ளது. பருவ மழை தீவிரமாகும் பட்சத்தில் அணைகள் நிரம்பினால், மின் உற்பத்தி அதிகரிக்கப்படும். "இதன் காரணமாக நீலகிரியில் மழை காலத்தின் போது, மின் தடை விரைவில் ரத்து செய்யப்படும்,' என எதிர்பார்க்கப்படுகிறது.


  • வாக்கிங் சென்றஓட்டல் அதிபர் மாயம்
    பொள்ளாச்சி: பொள்ளாச்சியில், "வாக்கிங்' சென்று காணாமல் போன ஓட்டல் அதிபரை போலீசார் தேடி வருகின்றனர்.பொள்ளாச்சி வி.கே.வி., லே-அவுட், ஸ்ரீ நகரை சேர்ந்தவர் துரைசாமி, 46, இவருக்கு பொள்ளாச்சி, பாலக்காடு, கோவை ரோட்டில் "சூர்யா' என்ற பெயரில் ஓட்டல் உள்ளது. இவரும், இவரது தந்தை கண்ணனும் ஓட்டல் நிர்வாகத்தை கவனித்து வருகின்றனர்.கடந்த 9ம் தேதி காலை 7.00 மணிக்கு மகாலிங்கபுரம் ரவுண்டானா அருகே நடைபயிற்சி செல்வதாக கூறி துரைசாமி சென்றார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், உறவினர்கள் அவரை தேடினர். துரைசாமி மொபைலை வைத்துவிட்டு வாக்கிங் சென்றிருந்தார். அதனால் தேடுதல் வேட்டையில் தொடர்ந்து சுணக்கம் ஏற்பட்டுள்ளது. 11 நாட்களாகியும் அவர் கிடைக்காததால் உறவினர்கள் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.


  • மாமல்லபுரத்தில் அமெரிக்க தூதர் சுற்றுலா
    மாமல்லபுரம்: மாமல்லபுரத்திற்கு அமெரிக்க தூதர் சுற்றுலா வந்தார்.சென்னையில் அமெரிக்க தூதரகம் இயங்கி வருகிறது. இங்கு, இந்தியாவின் அமெரிக்க தூதராக பணிபுரியும் நான்சி ஜே பவல், நேற்று காலை, மாமல்லபுரத்திற்கு சுற்றுலா வந்தார். காலை 9 மணிக்கு வந்த அவர், கடற்கரை கோவில், ஐந்து ரதங்கள், அர்ஜுணன் தபசு ஆகிய இடங்களை சுற்றிப் பார்த்தார். பின், காலை 11 மணிக்கு கோவளத்திற்கு புறப்பட்டுச் சென்றார்.


  • மும்பை அசத்தல் வெற்றி: ராஜஸ்தான் அணியை வீழ்த்தியது
    ஜெய்ப்பூர்: ராஜஸ்தானுக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சொந்த மண்ணில் சோபிக்கத்தவறிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ஏமாற்றமே மிஞ்சியது.ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐந்தாவது ஐ.பி.எல்., தொடருக்கான கடைசி மற்றும் 72வது லீக் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின.கிப்ஸ் ஓய்வு:மும்பை அணியில் கிப்ஸ், முனாப் படேல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இவர்களுக்கு பதிலாக ஜேம்ஸ் பிராங்க்ளின், தவால் குல்கர்னி வாய்ப்பு பெற்றனர். ராஜஸ்தான் அணியில் கோஸ்வாமி, ஜோகன் போத்தா நீக்கப்பட்டு திஷாந்த் யாக்னிக், பிராட் ஹாக் இடம் பிடித்தனர். "டாஸ்' வென்ற ராஜஸ்தான் கேப்டன் டிராவிட் பேட்டிங் தேர்வு செய்தார்.வாட்சன் நம்பிக்கை:ராஜஸ்தான் அணிக்கு டிராவிட் (5) ஏமாற்றினார். ஆர்.பி. சிங் பந்தில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்த ரகானே (13) நிலைக்கவில்லை. பின் இணைந்த ஷேன் வாட்சன், ஸ்டூவர்ட் பின்னி ஜோடி பொறுப்பாக ஆடியது. ஹர்பஜன் வீசிய 10வது ஓவரில் ஒரு சிக்சர், மூன்று பவுண்டரி அடித்த பின்னி (30), மூன்றாவது விக்கெட்டுக்கு 53 ரன்கள் சேர்த்து "ரன்-அவுட்' ஆனார். போலார்டு பந்தில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த வாட்சன் (45) அரைசத வாய்ப்பை இழந்தார்.ஷா ஆறுதல்:பின் ஓவேஸ் ஷா, அசோக் மனேரியா ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. மும்பை அணி பந்துவீச்சை எளிதாக சமாளித்த இந்த ஜோடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. ஐந்தாவது விக்கெட்டுக்கு 43 ரன்கள் சேர்த்த போது மனேரியா (21) வெளியேறினார். அடுத்து வந்த திஷாந்த் யாக்னிக் (6), மலிங்கா வேகத்தில் பெவிலியன் திரும்பினார். ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. ஓவேஸ் ஷா (28) அவுட்டாகாமல் இருந்தார். மும்பை அணி சார்பில் குல்கர்னி 3 விக்கெட் வீழ்த்தினார்.சூப்பர் ஜோடி:எட்டக்கூடிய இலக்கை விரட்டிய மும்பை இந்தியன்ஸ் அணிக்கு சச்சின், டுவைன் ஸ்மித் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. ராஜஸ்தான் பந்துவீச்சை பதம்பார்த்த இந்த ஜோடி அணியின் ஸ்கோரை வேகமாக உயர்த்தியது. சிக்சர் அடித்து தனது ரன் கணக்கை துவக்கிய ஸ்மித், சண்டிலா வீசிய 11வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்சர் விளாசி அரைசதம் அடித்தார். மறுமுனையில் இவருக்கு ஒத்துழைப்பு தந்த சச்சின், தன்பங்கிற்கு அரைசதம் அடித்தார். மும்பை அணி 18 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 163 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஸ்மித் (87), சச்சின் (58) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை மும்பை அணியின் டுவைன் ஸ்மித் பெற்றார்.முதல் அணிநேற்று ராஜஸ்தானை வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி, ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் அணி என்ற சாதனை படைத்தது. முன்னதாக பெங்களூரு (எதிர்-மும்பை), டில்லி (எதிர்-டெக்கான்), சென்னை (எதிர்-டில்லி) அணிகள் தலா 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றன.


  • சசசின் எம்.பி.யாக பதவியேற்பது எப்போது?
    புதுடில்லி: நடந்து வரும் பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவதற்குள் சச்சின் ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் ராஜ்யசபா எம்.பி.யாக நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து டில்லி ஐகோர்டில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் சச்சின் எம்.பி.யாவில் தடையில்லை எனவும் இது தொடர்பாக மத்திய அரசு ஜூலை 5-ம் தேதிக்குள் பதில அளிக்குமாறு கூறியுள்ளது.தற்போது சச்சின் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி வருகிறார். வரும் 27-ம் ‌தேதி ஐ.பி.எல். போட்டிகள் முடிகின்றன. எனினும் பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவ‌டைவதற்குள்ளாக அவர் பதவியேற்பார் என ‌தகவல்கள் தெரிவிக்கின்றன.


  • சசசின் எம்.பி.யாக பதவியேற்பது எப்போது?
    புதுடில்லி: நடந்து வரும் பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவதற்குள் சச்சின் ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபல கிரிக்கெட் வீரர் சச்சின் ராஜ்யசபா எம்.பி.யாக நியமிக்கப்பட்டார். இதை எதிர்த்து டில்லி ஐகோர்டில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் சச்சின் எம்.பி.யாவில் தடையில்லை எனவும் இது தொடர்பாக மத்திய அரசு ஜூலை 5-ம் தேதிக்குள் பதில அளிக்குமாறு கூறியுள்ளது.தற்போது சச்சின் ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி வருகிறார். வரும் 27-ம் ‌தேதி ஐ.பி.எல். போட்டிகள் முடிகின்றன. எனினும் பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிவ‌டைவதற்குள்ளாக அவர் பதவியேற்பார் என ‌தகவல்கள் தெரிவிக்கின்றன.


  • என்.டி.பி.சி., நிறுவனம் ரூ.21,000 கோடி முதலீட்டு திட்டம்

    புதுடில்லி:பொதுத் துறையைச் சேர்ந்த என்.டி.பி.சி., நாட்டின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனமாக திகழ்கிறது. இந்நிறுவனம், நடப்பு 2012-13ம் நிதியாண்டில், விரிவாக்கம் மற்றும் பல்வேறு மின் உற்பத்தி திட்டங்களுக்காக 20 ஆயிரத்து 900 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய ...

  • பூச்சி மருந்து சந்தை மதிப்பு :ரூ.25,000 கோடியாக அதிகரிக்கும்

    புதுடில்லி:இந்தியாவின், பூச்சி மருந்து சந்தை மதிப்பு, வரும் 2017ம் ஆண்டு, தற்போது உள்ளதை விட, இரு மடங்கு உயர்ந்து, 500 கோடி டாலராக (25 ஆயிரம் கோடி ரூபாய்) அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.மத்திய, மாநில அரசுகள், வேளாண் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை ...

  • தங்கம் இறக்குமதி 1,000 டன்னாக குறையும்

    மும்பை:நடப்பு 2012-13ம் நிதியாண்டில், தங்கம் இறக்குமதி, 1,000 டன்னாக இருக்கும் என, அசோசம் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.அன்னிய நிதி நிறுவனங்கள், இந்திய பங்கு சந்தைகளில் முதலீடு செய்வது குறைந்து வருகிறது. மேலும், பணவீக்கம் அதிகரிப்பு, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் ...

  • கர்நாடகா பேங்க் ரூ.3.50 டிவிடெண்டு

    மங்களூர்:கர்நாடகா வங்கி, அதன் பங்குதாரர்களுக்கு, பங்கு ஒன்றிற்கு 3.50 ரூபாய் டிவிடெண்டு வழங்க முடிவு செய்துள்ளது.இவ்வங்கி, சென்ற மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில், 83.16 கோடி ரூபாயை நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே ...

  • கோல் இந்தியா நிறுவனம் நிகர லாபம் சரிவு

    பொதுத் துறையைச் சேர்ந்த கோல் இந்தியா நிறுவனம், மார்ச்சுடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில், 1,224 கோடி ரூபாயை தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய நிதியாண்டின் இதே காலாண்டை விட, 11.7 சதவீதம் (1,386 கோடி ரூபாய்) குறைவாகும்.இதே காலாண்டுகளில், ...

  • ஆதித்யா பிர்லா நுவோ விற்பனை ரூ.5,922 @காடி

    பன்முக வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும், ஆதித்யா பிர்லா நுவோ நிறுவனம், மார்ச் மாதத்துடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில், 170 கோடி ரூபாயை ஒட்டு மொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலாண்டை விட 42 சதவீதம் (294 கோடி ரூபாய்) குறைவாகும்.


    இதே ...

  • ஜே.கே. பேப்பர் 15 சதவீத டிவிடெண்டு

    ஜே.கே.பேப்பர் நிறுவனம், சென்ற நிதியாண்டிற்கு அதன் பங்குதாரர்களுக்கு, 15 சதவீத டிவிடெண்டு வழங்க முடிவு செய்துள்ளது. இதன்படி, 10 ரூபாய் முகமதிப்பு கொண்ட பங்கு ஒன்றிற்கு, 1.50 ரூபாய் டிவிடெண்டாக கிடைக்கும்.இந்நிறுவனம், மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நான்காவது ...

  • டாட்டா ஸ்டீல் விற்பனை ரூ.33,860 கோடி

    டாட்டா குழுமத்தைச் சேர்ந்த டாட்டா ஸ்டீல் நிறுவனம், சென்ற மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த நான்காவது காலாண்டில், 433 கோடி ரூபாயை ஒட்டுமொத்த நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, இதற்கு முந்தைய நிதி ஆண்டின் இதே காலாண்டை விட, 90 சதவீதம் (4,176 கோடி ரூபாய்) குறைவாகும்.இதே ...

  • எல்.ஜி., எக்யூப்மென்ட் விற்பனை அதிகரிப்பு

    சென்ற 2011-12ம் நிதியாண்டில், எல்.ஜி., எக்யூப்மென்ட் நிறுவனத்தின் விற்பனை அதிகரித்தபோதிலும், அதன் நிகர லாபம் குறைந்துள்ளது.இந்நிறுவனம், சென்ற நிதியாண்டில், 76 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. இது, முந்தைய நிதியாண்டில், 81 கோடி ரூபாயாக உயர்ந்திருந்தது. அதே சமயம், ...

  • சரத் பொன்சேகாவை விடுவிக்க அதிபர் ராஜபக்சே கையொப்பம்

    கொழும்பு: இலங்கை முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை விடுவிக்க, அதிபர் ராஜபக்ஷே கையெழுத்திட்டுள்ளார்.இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான சண்டை முடிந்த பிறகு, இந்த வெற்றிக்கு அதிபர் ராஜபக்ஷேவும், சரத் பொன்சேகாவும் உரிமை கொண்டாடினர். இதன் எதிரொலியாக, 2010ல் நடந்த தேர்தலில், அதிபர் ராஜபக்ஷேவை எதிர்த்து சரத் பொன்சேகா போட்டியிட்டு தோல்வியடைந்தார். அரசியல் எதிரியாகிவிட்ட சரத் பொன்சேகா மீது, ஊழல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.இந்நிலையில், பொன்சேகாவின் மனைவி அனோமா, ராஜபக்ஷேவை சந்தித்துப் பேசினார். இதைத் தொடர்ந்து ...

  • இத்தாலியில் நிலநடுக்கம் ஆறு பேர் பலி

    ரோம்: இத்தாலியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டதில், ஆறு பேர் பலியாகினர். 50க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.இத்தாலியின் வெனிஸ் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், நேற்று அதிகாலை, 5.9 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், மக்கள் பீதியடைந்து தெருக்களுக்கு ஓடி வந்தனர். மிலன் நகரை சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலநடுக்கம் காணப்பட்டது.இதனால், தேவாலயங்கள் உள்ளிட்ட ஏராளமான கட்டடங்கள் சேதமடைந்தன. பெராரா அருகே பிளாஸ்டிக் தொழிற்சாலை இடிந்து விழுந்ததில், ஆறு தொழிலாளர்கள் பலியாகினர். மற்ற இடங்களில், இடிபாடுகளில் சிக்கி, 50க்கும் அதிகமான மக்கள் ...

  • நேபாள அமைச்சரவை மீண்டும் விஸ்தரிப்பு

    காத்மாண்டு: நேபாள அமைச்சரவை, நேற்று மூன்றாவது முறையாக விரிவுபடுத்தப்பட்டது. மூன்று அமைச்சர்கள், புதிதாக பதவி ஏற்றுக் கொண்டனர்.11 மாகாணங்கள்நேபாளத்தில், கடந்த 2008ல், மன்னராட்சி முடிவுக்கு வந்த பின், மாவோயிஸ்டுகள் தலைமையில், ஜனநாயக ஆட்சி அமலானது. ஆனால், இதுவரை அங்கு ஸ்திரமான ஆட்சி அமையாததால், புதிய அரசியலமைப்பை நிறைவேற்றுவதற்கு, அனைத்து கட்சிகளிடையே உடன்பாடு ஏற்படாமல் உள்ளது.இந்நிலையில், அனைத்துக் கட்சிகளும் பங்கு கொண்ட தேசிய அரசு அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து கட்சிகளின் ஒத்துழைப்புடன், அரசியலமைப்பு சட்டம் இம்மாத இறுதிக்குள் நிறைவேற்றப்பட உள்ளது. ...

  • சலவை இயந்திரத்தில் குழந்தை : அலறிய அமெரிக்க தம்பதியர்

    வாஷிங்டன்: அமெரிக்காவில், சலவை இயந்திரத்தில் குழந்தையை வைத்து வேடிக்கை பார்த்த தம்பதியர், இயந்திரம் சுற்ற ஆரம்பித்ததும் கதறிய சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.வெளிநாடுகளில், வாடகை சலவை இயந்திரங்களில், பொதுமக்கள் தங்கள் துணிகளை சலவைக்கு கொடுப்பது வழக்கம். சில நிமிடங்களில், துணி துவைக்கப்பட்டு உரியவரிடம் கொடுக்கப்படும்.அமெரிக்காவை சேர்ந்த இளம் தம்பதியர், தங்கள் குழந்தையுடன் பொது சலவை இயந்திர நிலையத்தில், துணிகளை சலவைக்கு கொடுக்க சென்றனர். துணி சலவை முடியும் வரை, குழந்தையுடன் விளையாடிக்கொண்டிருந்த இந்த தம்பதிக்கு, திடீரென விபரீத புத்தி ...

  • உயர் பதவி வகிக்கும் பெண்கள் மது அருந்துவது அதிகரிப்பு

    லண்டன்: உயர் பதவி வகிக்கும் பெண்கள், சாதாரண உடல் உழைப்பு கொண்டவர்கள் குடிப்பதை விட இரண்டு மடங்கு அதிகமாக மது அருந்துவதாக, பிரிட்டன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேற்கத்திய நாடுகளில் பெண்கள் மது அருந்துவது, சர்வ சாதாரணமான விஷயம். சிகையலங்காரம் செய்பவர்கள், துப்புரவு பணி செய்பவர்கள், தொழிற்சாலையில் கடின உழைப்பில் ஈடுபடுபவர்கள் மது அருந்துவதை விட, மேலாளர் உள்ளிட்ட உயர் பதவி வகிக்கும் பிரிட்டன் பெண்கள் இரண்டு மடங்கு அதிகமாக மது அருந்துவதாக, சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.இது குறித்து, பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சர் ...

  • சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: செல்சியா சாம்பியன்
    முனிக்:சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் செல்சியா அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. பைனலில் பேயர்ன் முனிக் அணியை "பெனால்டி ஷூட் அவுட்' முறையில் வீழ்த்தியது.
    ஜெர்மனியில், சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் நடந்தது. இதன் பைனலில் செல்சியா, பேயர்ன் முனிக் அணிகள் மோதின. முதல் பாதி முடிவில் இரு அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
    பின் எழுச்சி கண்ட பேயர்ன் முனிக் அணியின் தாமஸ் முல்லர் 83வது நிமிடத்தில் முதல் கோல் அடித்து நம்பிக்கை அளித்தார். இதற்கு 88வது நிமிடத்தில் செல்சியாவின் டிடியர் டிராக்பா ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். தொடர்ந்து ...
  • கால்பந்து: செல்டென்ஹாம் வெற்றி
    செல்டன்ஹாம்:இங்கிலாந்தில் நடக்கும் பிரிமியர் லீக் கால்பந்து தொடரின் "பிளே ஆப்' சுற்றில் செல்டென்ஹாம், டார்க்குவே யுனைடட் அணிகள் மோதின. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய செல்டென்ஹாம் அணிக்கு மெக்லாஸ்ஹன் 75வது முதல் கோல் அடித்தார். இதற்கு யுனைடட் அணியின் அட்டினோ 85வது நிமிடத்தில் பதிலடி கொடுத்தார். பின் 87வது நிமிடத்தில் செல்டென்ஹாம் அணியின் பேக் இரண்டாவது கோல் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். முடிவில் செல்டென்ஹாம் அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி ...
  • கால்பந்து: மிசோரம் வெற்றி
    கட்டாக்:சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மிசோரம் வெற்றி பெற்றது.சந்தோஷ் டிராபி கால்பந்து தொடர் ஒரிசாவில் நடக்கிறது. இதில் கட்டாக்கில் நடந்த போட்டியில் உத்திரகாண்ட் , மிசோரம் அணிகள் மோதின. துவக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்திய மிசோரம் அணி 6 கோல் அடித்தது. உத்தரகாண்ட் அணி கோல் அடிக்கவில்லை. முடிவில் மிசோரம் அணி 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் அரியானா, அசாமை 2-0 என்ற கணக்கில் வென்றது. ...
  • கால்பந்து: மிசோரம் வெற்றி
    கட்டாக்:சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மிசோரம் வெற்றி பெற்றது.
    சந்தோஷ் டிராபி கால்பந்து தொடர் ஒரிசாவில் நடக்கிறது. இதில் கட்டாக்கில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் , மிசோரம் அணிகள் மோதின. துவக்கம் முதலே ஆபார ஆட்டத்தை வெளிபடுத்திய மிசோரம் அணி 12 கோல் அடித்தது. ராஜஸ்தான் அணி கோல் அடிக்கவில்லை. முடிவில் மிசோரம் அணி 12-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. மற்றொரு போட்டியில் அரியானா, சிக்கிமை 4-1 என்ற கணக்கில் ...
  • கால்பந்து: பார்சிலோனா அணி "டிரா'
    மாட்ரிட்: ரியல் பெட்ஸ், பார்சிலோனா அணிகள் மோதிய ஸ்பானிஸ் லா லீகா கால்பந்து போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் "டிரா' ஆனது.
    ஸ்பெயினில் நடந்த இத்தொடரின் லீக் போட்டியில் ரியல் பெட்ஸ், பார்சிலோனா அணிகள் மோதின. போட்டியின் முதல் பாதியின் 9வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் செர்ஜியோ ஒரு கோல் அடித்தார். ரியல் பெட்ஸ் அணி கோல் எதுவும் அடிக்கவில்லை. இரண்டாம் பாதியில் ரியல் பெட்ஸ் அணியின் ரூபின்(73, 77) இரண்டு கோல் அடித்து, அணிக்கு வலு சேர்த்தார். 90வது நிமிடத்தில் பார்சிலோனா அணியின் கெய்ட்டா ஒரு கோல் அடிக்க, போட்டி 2-2 என்ற கோல் கணக்கில் "டிரா' ...
  • சந்தோஷ் கோப்பை கால்பந்து: இன்று துவக்கம்
    கட்டாக்: சந்தோஷ் கோப்பை கால்பந்து தொடர் இன்று துவங்குகிறது.
    சந்தோஷ் டிராபி 2012 கால்பந்து தொடர் ஒரிசாவில் இன்று துவங்குகிறது. இதில் பங்கேற்கும் 25 அணிகள், ஏழு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. மே 11- மே 16 வரை லீக் பேட்டிகளும் மே 18-மே 23 வரை காலிறுதி போட்டிகளும் நடைபெற உள்ளன. மே 25ல் அரையிறுதியும் மே 28ல் பைனலும் ...
  • பிரிமியர் லீக் கால்பந்து லிவர்பூல் வெற்றி
    லண்டன: பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் லிவர்பூல் அணி 4-1 என்ற கோல் கணக்கில் செல்சியாவை வீழ்த்தியது.
    இங்கிலாந்தில், பிரிமியர் லீக் கால்பந்து தொடர் நடக்கிறது. லண்டனில் நடந்த போட்டியில் லிவர்பூல், செல்சியா அணிகள் மோதின. இதில் அபாரமாக ஆடிய லிவர்பூல் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
    இதுவரை 37 போட்டியில் 14 வெற்றி, 13 தோல்வி, 10 "டிரா' உட்பட 52 புள்ளிகளுடன் 8வது இடத்துக்கு முன்னேறியது. செல்சியா அணி, 61 புள்ளிகளுடன் 6வது இடத்தில் நீடிக்கிறது. மான்செஸ்டர் சிட்டி (86), மான்செஸ்டர் யுனைடெட் (86), ஆர்சனல் (67), டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் (66), நியூகேசில் ...
  • பிரிமியர் லீக் கால்பந்து: ஆர்செனல் "டிரா'
    லண்டன்: பிரிமியர் லீக் கால்பந்து போட்டியில் ஆர்செனல், நார்விச் அணிகள் மோதிய போட்டி "டிரா' ஆனது.இங்கிலாந்தில், பிரிமியர் லீக் கால்பந்து தொடர் நடக்கிறது. லண்டனில் நடந்த லீக் போட்டியில் ஆர்செனல், நார்விச் அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி, ஆட்டநேர முடிவில் 3-3 என்ற கோல் கணக்கில் "டிரா' ஆனது.இதன்மூலம் அர்சனல் அணி 37 போட்டியில் 20 வெற்றி, 7 "டிரா', 10 தோல்வி உட்பட 67 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. முதல் இரண்டு இடங்களில் யுனைடெட் சிட்டி (83 புள்ளி), மான்செஸ்டர் யுனைடெட் (83) அணிகள் ...
  • எப்.ஏ., கோப்பை கால்பந்து: செல்சியா சாம்பியன்
    லண்டன்: எப்.ஏ., கோப்பை கால்பந்து தொடரில், செல்சியா அணி சாம்பியன் பட்டம் வென்றது.இங்கிலாந்தில் உள்ளூர் தொடரான எப்.ஏ., கோப்பை கால்பந்து தொடர் நடந்தது. இதன் பைனலில் செல்சியா, லிவர்பூல் அணிகள் மோதின.விறுவிறுப்பான பைனலில் செல்சியா அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, ஏழாவது முறையாக (1969-70, 1996-97, 1999-2000, 2006-07, 2008-09, 2009-10, 2011-12) சாம்பியன் பட்டம் வென்றது.செல்சியா அணிக்கு ராமிரஸ் (10வது நிமிடம்), டிராக்பா (51வது) தலா ஒரு கோல் அடித்தனர். லிவர்பூல் அணிக்கு கார்ரோல் (63வது) ஆறுதல் ...

Recent Updates

Advertise Here
Other Link :  www.thedindigulonline.com